சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தட்டார்மடம் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள சிறப்பூர் பகுதியில் இருந்து திசையன்விளை செல்லும் பிரதான சாலையில் 60 ஆண்டுகள் பழமையான கொடுக்காப்புளி மரம் இருந்தது. இந்த மரம் நேற்று மதியம் திடீரென்று வேரோடு சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
அப்போது சாலையில் வாகனங்களோ, மக்களோ செல்லாததால் உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு வந்தனர். அறுவை எந்திரம் மூலம் மரத்தை வெட்டி சாலையிலிருந்து அகற்றினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story