ெரயில்வே கேட்டை திறக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு


ெரயில்வே கேட்டை திறக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 10:26 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் ெரயில்வே கேட்டை திறக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தென்காசி

பாவூர்சத்திரம்:

நெல்லையிலிருந்து நேற்று மாலை செங்கோட்டை நோக்கி புறப்பட்ட பாசஞ்சர் ெரயில் இரவு சுமார் 8.05 மணிக்கு பாவூர்சத்திரம் ெரயில் நிலையம் வந்தடைந்தது.

ெரயில் நிலையத்திற்கு ெரயில்கள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அருகில் உள்ள ெரயில்வே கேட்டை அடைப்பது வழக்கம். அதேபோல் நேற்று இரவு பாவூர்சத்திரம் ெரயில் நிலையம் அருகே தென்காசி - நெல்லை ரோட்டில் உள்ள ெரயில்வே கேட் அடைக்கப்பட்டது.

பின்னர் செங்கோட்டை பாசஞ்சர் ெரயில் வழக்கமான நேரத்திற்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பின்னர் ெரயில்வே கேட்டை பணியாளர்கள் திறக்க முயன்றனர். ஆனால் திறக்க முடிவயில்லை.

எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் சுமார் ½ மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் கேட் முழுவதும் திறக்க முடியாமல், ஒரு பகுதி அளவுக்கு திறக்க முடிந்தது.

இதனால் இரண்டு வழிகளில் செல்லக்கூடிய போக்குவரத்து நடைபெறாமல் ஒரு வழியாகவே வாகனங்கள் மெதுவாக சென்றன. இதனால் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.



Next Story