சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் சாணாரத் தெருவை சேர்ந்தவர் மணி(வயது 56). இவரது வீடு கட்டும் அஸ்திவாரப் பணிகளுக்காக கோட்டப்பாளையத்தில் இருந்து டிராக்டர் மூலம் மண்ணை எடுத்து வந்து பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று டிராக்டர் டிப்பரில் இருந்து மண்ணை கீழே கொட்ட முயன்றபோது டிராக்டரின் முன்பகுதி நடுரோட்டில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு டிராக்டர் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் கோட்டப்பாளையம்- உப்பிலியபுரம் இடையே உள்ள சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story