குடிநீர் குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்


குடிநீர் குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம் ெசய்யப்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து மாற்றம் ெசய்யப்பட்டது.

அடிக்கடி பழுதாகும் குடிநீர் குழாய்கள்

குழித்துறை நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் அந்தப் பகுதியில் சாலைகள் சரியாக மூடி செப்பனிடப்படாததால் அவை குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.

இதனால் சாலைகளில் ெபாதுமக்கள் நடந்து செல்லவும் வாகனங்களில் செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மார்த்தாண்டம் பகுதிகளில் புதிதாக பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களும் ஏற்கனவே உள்ள பழைய குடிநீர் குழாய்களும் அடிக்கடி பழுதாகி அவற்றில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

போக்குவரத்து மாற்றம்

இந்த நிலையில் பம்மத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக மார்த்தாண்டம் சந்திப்பு செல்லும் சாலையில் பழைய தியேட்டர் ஜங்ஷன் பகுதியில் சமீபத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. அப்போது சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டு குடிநீர் குழாயை சீரமைத்தனர்.

இங்கு நேற்று மீண்டும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் அந்த பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி நடந்தது. இதற்காக நேற்று மதியம் முதல் மாலை வரை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. அதாவது பம்மத்தில் இருந்து மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்லும் பஸ் உள்ளிட்ட இதர வாகனங்கள் மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டது.

குழித்துறை நகராட்சி பகுதியில் இவ்வாறு அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமடைவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story