மேம்பாலம் அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல்


மேம்பாலம் அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல்
x

பிள்ளையார் குப்பத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேலூர்

வேலூரை அடுத்த பெருமுகை பகுதியில் உள்ள சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. பிள்ளையார் குப்பத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பிள்ளையார் குப்பத்தில் இருந்து சத்துவாச்சாரி செல்லும் சர்வீஸ் சாலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து தேசிய நெடுஞ்சாலை வரை நீண்ட தூரம் நின்றதால் வாகன ஓட்டிகள் வெகுநேரம் காத்து கிடந்தனர். பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. மேம்பாலம் அமைக்கும் பணியை கடப்பதற்கு மட்டும் வாகன ஓட்டிகளுக்கு வெகுநேரம் ஆவதால் அவர்கள் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story