பஞ்சரான லாரியால் போக்குவரத்து பாதிப்பு


பஞ்சரான லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x

கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் பஞ்சரான லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக சாலை செல்கிறது. நேற்று காலை 10 மணிக்கு அந்த வழியாக வந்த லாரியின் முன்பக்க டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் லாரி நடுரோட்டில் நின்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் லாரி டிரைவர், கிளீனர் பஞ்சரான டயரை கழற்றி விட்டு, வேறு டயரை பொருத்தினர். இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு லாரி அங்கிருந்து இயக்கி செல்லப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.


Next Story