மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

பணகுடியில் சாலையில் மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி தெற்கு மெயின் ரோடு மீன்சந்தை அருகே பழமையான புளியமரம் ஒன்று பட்டுப்போய் நின்றது. அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக நேற்று காலையில் புளியமரத்தின் ஒரு கிளை சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்தனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முத்து முருகன், சாலை ஆய்வாளர் வெள்ளத்துரை ஆகியோர் உடனடியாக பட்டுப்போன புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மாலை 5 மணி முதல் பணகுடி மெயின்ரோட்டில் போக்குவரத்து தொடங்கியது.


Next Story