வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் டிரோன்கள் பறக்கவும் தடை


வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் டிரோன்கள் பறக்கவும் தடை
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்து மாற்றம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சென்னையில் இருந்து ரெயிலில் காட்பாடிக்கு வருகை தருகிறார். அவர் இன்று மற்றும் நாளை (வியாழக்கிழமை) காட்பாடி, வேலூர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சேர்க்காடு மற்றும் இ.பி. கூட்ரோடு வழியாக வேலூருக்கு செல்ல வேண்டும்.

குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வடுகன்தாங்கல், விரிஞ்சிபுரம் வழியாக வேலூர் பைபாஸ் செல்ல வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை, தங்ககோவில் வழியாக பெங்களுரூ பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டும்.

டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிக்குள் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான்ஊர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான்ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.



Next Story