காவிரி பாலத்தில் 10-ந் தேதி நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம்


காவிரி பாலத்தில் 10-ந் தேதி நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம்
x

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி காவிரி பாலத்தில் 10-ந் தேதி நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றப்படுகிறது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி காவிரி பாலத்தில் 10-ந் தேதி நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றப்படுகிறது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு 5 மாதகாலம் ஆகும் என்பதால் மேற்படி காவிரி பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 12 மணி முதல் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது.

திருச்சி சத்திரம் பஸ்நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரி பாலத்துக்கு முன்னதாக உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஓயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக ரெயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்காவல் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

சென்னை செல்லும் வாகனங்கள்

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்காவல் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்காவல் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி டிரங்க் சாலை வழியாக ரெயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பஸ்நிலையம் செல்லலாம்.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தை தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவிநகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1 டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1 டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

புறநகர் பஸ்கள்

சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்துக்கு முன்னதாக உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஓயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1 டோல்கேட் சென்று செல்லலாம். காவிரிப்பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி மேற்கண்ட மாற்றுப்பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் பிரதீப் குமார் கூறி உள்ளார்.


Next Story