ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு


ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
x

குன்னூரில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூரில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நகராட்சி மார்க்கெட்

குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, காய்கறி, பழம் உள்பட 800 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் சமவெளி பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் குன்னூர் பஸ் நிலையம், பழைய லாரி நிலையம் வழியாக வி.பி.தெருவில் உள்ள துருவம்மன் கோவில் அருகே நிறுத்தப்படுகின்றன.

பின்னர் லாரிகளில் இருந்து பொருட்கள் இறக்கப்படுகின்றன. இதைதொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை மார்க்கெட் கடைகளுக்கும், வெளிப்புற கடைகளுக்கும் கொண்டு செல்கிறார்கள். இதனால் வி.பி.தெரு பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லாரிகள் வி.பி.தெருவிற்குள் வந்து பொருட்களை இறக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

தற்போது அந்த கட்டுப்பாடு இல்லை. இதற்கிடையே பழைய லாரி நிலையத்தில் இருந்து வி.பி.தெரு துருவம்மன் கோவில் வரை சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து உள்ளனர். இந்த கடைகளால் லாரிகள் சுலபமாக பொருட்களை கொண்டு சென்று இறக்கி விட்டு திரும்பி வர முடியாத நிலை உள்ளது.

இதனால் வி.பி தெருவிற்குள் லாரிகள் சென்று வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று விட்டு பஸ் நிலையம் வர கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, குன்னூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். மேலும் லாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வி.பி.தெருவிற்குள் சென்று வர ஆவன செய்ய வேண்டும் என்றனர்.


Next Story