பழுதாகி நின்ற பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு
கடமலைக்குண்டுவில் பஸ் ஒன்று பழுதாகி சாலையின் நடுவே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி
வருசநாட்டில் இருந்து நேற்று மதியம் தேனிக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கடமலைக்குண்டு பஸ்நிறுத்தம் அருகே திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது. அந்த பஸ்சை சாலையோரம் நிறுத்துவதற்காக அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து தள்ளினர். ஆனால் அந்த பஸ்சை தள்ள முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அப்போது அந்த பகுதியை கடந்து செல்ல முயன்ற 108 ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். பஸ்சில் ஏற்பட்ட கோளாறை டிரைவர் சரி செய்து சாலையோரம் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story