முக்குராந்தல் பகுதியில் போக்குவரத்து நெரிசல்


முக்குராந்தல் பகுதியில் போக்குவரத்து நெரிசல்
x

சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. சாத்தூர் நகரை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களின் தேவைகளுக்கு சாத்தூருக்கு வந்து செல்கின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் பலர் சாத்தூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.

ஆதலால் நகர் பகுதிகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலையோர கடைகள் காரணமாக சாலையின் அகலமும் மிகவும் குறைந்து விட்டது. இதன் காரணமாக சாத்தூர் மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நிரந்தர தீர்வு

சாத்தூர் முக்குராந்தல் வழியாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன. இந்த வழியாக தான் கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வந்து செல்வதால் இப்பகுதியில் அடிக்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண ரோட்டின் ஓரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story