ரோட்டில் சிக்கிய லாரி அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு


ரோட்டில் சிக்கிய லாரி அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
x

ரோட்டில் சிக்கிய லாரி அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் நேற்று பகல் கனராக லாரி ஒன்று இரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு முத்தூரிலிருந்து வெள்ளகோவில் நோக்கி, வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் அருகே வரும்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்களால் இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது, இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, பேருந்து நிலையத்திற்குள் சென்ற பேருந்துகள் திரும்பி செல்ல முடியாமல் பயணிகள் பேருந்து தாமதமாக சென்றது, ஒரு சில பேருந்துகள் எதிர் திசையில் சென்றன, உள்ளூர் வாகன ஓட்டிகள் வழி தெரிந்தவர்கள் மாற்று வழியை பயன்படுத்தி சென்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடையூறாக நின்ற காரை அப்புறப்படுத்தி லாரி செல்ல உதவினர்.

வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும், இங்கு நூற்றுக்கணக்கான நூல் மில்கள், எண்ணெய் ஆலைகள் விசைத்தறிக்கூடங்கள் உள்ளன, இங்கு ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கி மில்களில் வேலை செய்து வருகின்றனர், ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. காலை மாலை நேரங்களில், விசேஷ நாட்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் ஆகையால் காலை, மாலை நேரங்களில் வெள்ளகோவில் நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமாய் தன்னார்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-


Next Story