லோயர்கேம்பில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை
கூடலூர் அருகே லோயர்கேம்பில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தேனி
கூடலூர் அருகே லோயர்கேம்ப், குமுளி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் ஜீப், வேன்களிலும், தங்களது சொந்த இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். அதேபோல் கேரளாவுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர்.
இந்தநிலையில் கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் உரிய ஆவணங்கள் இன்றி செல்வதாகவும், அதிக அளவில் ஆட்களை ஏற்றிச்செல்வதால் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்வதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கூடலூர் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர ராமன் தலைமையிலான அதிகாரிகள், தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறையான ஆவணம் இல்லாமலும், வரி செலுத்தாமலும் வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story