போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை
குடியாத்தம் அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
குடியாத்தம் நகரின் வழியாக ஆந்திர, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், போக்குவரத்து துறை துணை ஆணையர் இளங்கோவன் ஆகியோர் உத்தரவின் பேரில், குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் இணைந்து குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாகனங்களில் உரிய சான்றிதழ்கள் உள்ளனவா, வாகனங்களை ஓட்டிகளுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது உரிய ஆவணங்கள் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுன் உரிமம் இல்லாமலும் வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.