திருப்பூரில் போக்குவரத்து நெரிசல்
பண்டிகை கால விடுமுறைகள் முடிந்த நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் மாநகரில் பெரும்பாலான நேரங்களில் அதிகமான வாகனப்போக்குவரத்து இருக்கும். இதனால் முக்கியமான ரோடுகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் என தொடர்ச்சியாக பண்டிகைகள் இருந்ததால் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக வழக்கமான போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனப்போக்குவரத்து சற்று குறைுந்தது.
இந்த நிலையில் தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை மற்றும் மாலையில் பள்ளி, அலுவலக நேரங்களில் குமரன் ேராட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதேபோல் மதிய வேளையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
ஊர்ந்து சென்ற வாகனங்கள்
இதேபோல், வீரராகவப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்ததையொட்டி காலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்து சென்றவண்ணம் இருந்தனர். குறிப்பாக மதியம் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பெருமாள் கோவில் அருகே காமராஜர் ரோட்டிலும் அடிக்கடி போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனாலும், கூட்டம் அதிகம் இருந்ததால் பொதுமக்கள் பலர் சாலை விதிகளை மதிக்காமல் பெருமாள் கோவிலின் பின் பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.