சாலையில் உள்ள இரும்பு தடுப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு


சாலையில் உள்ள இரும்பு தடுப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு
x
திருப்பூர்


உடுமலை தளி ரோட்டில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ரோட்டில் இரும்பு தடுப்புகள்

உடுமலையில் இருந்து தளி செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் முடியும் இடத்தில் பாதாள சாக்கடையின் இணைப்பு பகுதியை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இந்த பணி முடிந்த நிலையில் அங்கு சாலை சீரமைக்கப்படாமல் மண் போட்டு மூடப்பட்டுள்ளது.

இதன் காசாலையில் உள்ள இரும்பு தடுப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறுரணமாக குளி தோண்டப்பட்ட இடத்தின் அருகே ரோட்டின் குறுக்காக 2 இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. உடுமலையிலிருந்து தளி, அமராவதி அணை, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பாதையாக இது இருப்பதால் இந்த வழியாக உடுமலை நகரில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

போக்குவரத்துக்கு இடையூறு

இவ்வாறு நகரின் வாகன போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இது உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இங்கு இரும்பு தடுப்புகள் இருப்பது வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

அந்த நேரங்களில் பாலம் மற்றும் பாலத்தின் இணைப்பு சாலைகள் என மூன்று ரோடுகளில் இருந்தும் வாகனங்கள் மொத்தமாக வரும்போது இரும்பு தடுப்பு உள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே இந்த பகுதியில் ரோடு சீரமைத்து இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story