பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள்


பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள்
x
திருப்பூர்


வீரபாண்டிபிரிவு பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் கூட்டம்

திருப்பூர்- பல்லடம் சாலையில் வீரபாண்டி பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிந்து கோவை, உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகிறார்கள். இதனால் பஸ் நிறுத்தத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இது தவிர இந்த சாலையில் வாகனங்களும் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன.

தற்போது சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சாலையோரம் தோண்டப்பட்டுள்ளது.

மேலும் அதன் அருகிலேயே ஆட்டோக்கள் மற்றும் இதர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பயணிகளும் தினமும் அவதிப்படுகிறார்கள். இந்த பகுதியில்தான் திருப்பூர் தெற்குவட்டார போக்குவரத்து அலுவலகம், வீரபாண்டி சோதனை சாவடி உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே சாலையில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் இதர வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்.சாலை விரிவாக்க பணி தாமதம் ஏற்படுவதாலும், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாலும் அவசர வேலையாக செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story