போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்


போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
x
திருப்பூர்


வௌ்ளகோவில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

பத்திரப்பதிவு அலுவலகம்

வெள்ளகோவிலில் 200-க்கும் மேற்பட்ட நூல் மில்கள், எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள், செங்கல் சூளைகள், வணிக வளாகங்கள் உள்ளன. வெள்ளகோவிலில் கல்லாங்காடுவலசு என்ற இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது.

இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள வெள்ளகோவில், மேட்டுப்பாளையம், மங்கலப்பட்டி, சேனாபதிபாளையம், பச்சாபாளையம், வள்ளியரச்சல், வீரசோழபுரம், உத்தமபாளையம், முத்தூர், ராசாத்தாவலசு, வேலம்பாளையம், ஊடையம், சின்ன முத்தூர் ஆகிய 14 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டு மனை, வீடுகளை விற்க வாங்க மற்றும் அடமானம் இதர சேவைகளுக்கு இந்த அலுவலகத்திற்கு தான் வந்து செல்ல வேண்டி உள்ளது.

இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்களது இரண்டு சக்கர மற்றும் கார்களை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று விடுவதால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

நடவடிக்கை

இந்த சாலையின் வழியாக அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களோ, தீயணைப்பு வாகனமோ மற்றும் காலை மாலை நேரங்களில் செல்லக்கூடிய பள்ளி கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து இடையூறில் சிக்குகின்றன. இதனால் உரிய நேரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story