காதல் கணவர் இறந்ததால் சோகம்: தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
காதல் கணவர் இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம்
புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகள் சுபாஷினி (வயது 22). இவரது கணவர் பாலசுப்ரமணியன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலசுப்ரமணியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனால் அவரது மனைவி சுபாஷினி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். ேமலும் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று சுபாஷினி வீட்டில் தூக்கில் தொங்கினார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சுபாஷினியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கணவர் இறந்த சோகத்தில் தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் திருமணமான 7 மாதத்தில் சுபாஷினி தற்கொலை செய்துக்கொண்டதால் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.