தூத்துக்குடியில் பரிதாபம்:பள்ளி மாணவன் தூக்கு போட்டு சாவு


தூத்துக்குடியில் பரிதாபம்:பள்ளி மாணவன் தூக்கு போட்டு சாவு
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மகன் கற்குவேல் ராஜா (வயது 16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே கோவில் திருவிழா நடந்ததால், பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு மாணவர் கற்குவேல் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story