கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும்- காங்கிரஸ் கட்சி கோரிக்கை


கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும்- காங்கிரஸ் கட்சி கோரிக்கை
x

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் ரெயில்

மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஸ்வைக்கு, தென்னக ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ஈரோடு மாவட்ட துணைத்தலைவருமான கே.என்.பாஷா அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்து இருப்பதாவது:-

கொரோனா பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட சேலம் விருத்தாசலம் பயணிகள் ரெயில், மதுரை ராமேஸ்வரம் பயணிகள் ரெயில் இயக்க உத்தரவிடப்பட்டது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வங்காள தேசத்துக்கு ரெயில்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மீண்டும் இயக்க வேண்டும்

ஆனால், ஈரோட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மேட்டூர் செல்லும் பயணிகள் ரெயில், 7.40 மணிக்கு செல்லும் ஈரோடு திருச்சி பயணிகள் ரெயில், மாலை, 4.30 மணிக்கு செல்லும் ஈரோடு திருச்சி பயணிகள் ரெயில், மதியம் 1 மணிக்கு இயங்கிய ஈரோடு திருநெல்வேலி பயணிகள் ரெயில், காலை 7.40 மணிக்கு இயங்கிய ஈரோடு திருப்பூர், கோவை மார்க்கமாக பாலக்காடு வரை இயங்கிய பயணிகள் ரெயில், கோவை சேலம் பயணிகள் ரெயில் போன்ற ரெயில்கள் தற்போது இயக்கப்படவில்லை.

கோவை நாகர்கோவில் ரெயிலில், கோவை தூத்துக்குடிக்கு இணைக்கப்பட்ட இணை ெரயில் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படவில்லை. இதுபோன்ற ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் பொதுமக்களையும், ரெயில் பயணிகளையும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையும் ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story