ரெயில் விபத்து: தமிழர்களில் மூவரின் நிலவரம் தெரிந்தது
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் பயணித்த தமிழர்களில் மூவரின் நிலவரம் தெரிந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் தமிழகர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தநிலையில்,
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்களில் மூவரின் நிலவரம் தெரிந்தது.
கோவையை சேர்ந்த நாரகணிகோபி, சென்னையை சேர்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரும் வீடு திரும்பினர். கமல் என்பவர் ரெயிலில் பயணிக்கவில்லை மீதமுள்ள 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. மீதமுள்ள கார்த்திக், ரகுநாத், மீனா, கல்பனா, அருண் ஆகிய 5 பேரின் நிலை குறித்து விசாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகவல் தெரிந்தவர்கள் 044-28593990, 94458 69843 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.