ரெயிலை நிறுத்தி சோதனை


ரெயிலை நிறுத்தி சோதனை
x

சத்திரப்பட்டி ரெயில்நிலையத்தில் பாலக்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே ஊழியர்கள் எஸ்-5 பெட்டி சக்கரத்தில் சோதனை செய்தனர்.

திண்டுக்கல்

பாலக்காடு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 6.30 மணி அளவில் பழனி அருகே உள்ள ராமபட்டினம் ரெயில்வே கேட்டை கடந்து சென்றது. அப்போது ரெயிலின் எஸ்-5 பெட்டி சக்கரத்தில் ஆயில் வாடை வருவதாக கேட் கீப்பர் என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து ரெயில் 10 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு, சத்திரப்பட்டி ரெயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ரெயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பெட்டி சக்கரத்தில் சோதனை செய்தனர். அதில் எந்த கோளாறும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து சுமார் 20 நிமிடம் தாமதமாக அந்த ரெயில் திண்டுக்கல் வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.


Next Story