ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் ரெயில் தாமதமாக புறப்படும்
ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் ரெயில் தாமதமாக புறப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பரமக்குடி - சத்திரக்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே வருகிற 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர பிற நாட்களில் ராமேசுவரம்-மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06654) ராமேசுவரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். அதன்படி இந்த ரெயில் பாம்பன் பால பராமரிப்பு பணிக்காக ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.05 மணிக்கு பதிலாக மதியம் 1.05 மணிக்கு புறப்படும்.
Related Tags :
Next Story