ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் பலி
கும்பகோணத்தில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் உயிாிழந்தார்.
கும்பகோணம், ஜூன்.21-
கும்பகோணத்தில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் உயிாிழந்தார்.
என்ஜினீயர்
கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் மாத்தி கேட் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் கோபிநாத் (வயது 28). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 வருடங்களாக கோபிநாத் தனது வீட்டிலிருந்து பணி செய்து வந்தார்.
ரெயிலில் அடிபட்டு சாவு
சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு கோபிநாத் தாராசுரம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகேநடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோபிநாத் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோபிநாத் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.