மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ரெயில் சேவை
30 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
பயணிகள் ரெயில்
மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு சென்று வந்த திருநெல்வேலி பயணிகள் ெரயில், கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்டது. இந்த ெரயில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டது. ஆனால் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
இந்த ெரயிலை திருநெல்வேலி வரை இயக்க வேண்டும் என ெரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதற்கிடையில் மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத விரைவு ெரயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில்
அதன்படி 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் நண்பகல் 11.30 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை ரெயில் இயக்கப்பட்டது. அப்போது ரெயிலுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
9 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ெரயில், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடைகிறது. இதேமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடைகிறது.
23 பெட்டிகள் இணைக்க வேண்டும்
திருநெல்வேலி செல்லும் பயணிகள் இந்த செங்கோட்டை ெரயிலில் திண்டுக்கல் வரை சென்று, ஈரோட்டில் இருந்து வரும் ெரயிலில் ஏறி திருநெல்வேலி செல்லலாம். 9 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ெரயிலை பயணிகளின் நலனை கருதி 23 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என ெரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரெயில் பயணிகள் சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனர் பவுல்ராஜ், அறம் செய் அறக்கட்டளை சார்பில் சிவா, மகாவீர்ஜெயின், அப்துல்லா, அக்பர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், ெரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீர்குமார் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.