நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி முகாம் முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி முகாம் முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்
x

நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி முகாமை முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

நாமக்கல்:

கொரோனா விடுமுறை காரணமாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடம் எழுதுவதிலும், கணித பாடங்களை கற்பதிலும் குறைபாடு கண்டறியப்பட்டு உள்ளது. இதை நிவர்த்தி செய்ய 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்கிற தலைப்பில் நேற்று முதல் பயிற்சி முகாம் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களிலும் நேற்று எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி தொடங்கி வைத்து பேசினார். இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் மகேஷ்குமார், புகழேந்தி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தேவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story