மண்வள அட்டை திட்டம் குறித்து பயிற்சி


மண்வள அட்டை திட்டம் குறித்து பயிற்சி
x

மண்வள அட்டை திட்டம் குறித்து பயிற்சி நடந்தது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

நயினார்கோவில் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம் மண்வள அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா தலைமை தாங்கி பேசினார். அப்போது, நெல் பயிர் சாகுபடி செய்யும் மண்ணில் சத்து இழப்பு ஏற்படுகிறது. எனவே மண் வளம் பேணி காக்கும் பொருட்டு மாற்றுப்பயிர், பசுந்தாள், உரப்பயிர், பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் என்றார். வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கரமணியன் மண் வளம் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன் மண்வள அட்டை சார்ந்த உர பரிந்துரை மற்றும் உர மானியம் பற்றி பேசினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றியும், உயிர் உர கட்டுப்பாட்டு மையம் வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உயிர் உரங்களின் பயன்பாடு பற்றியும், மண் பரிசோதனை நிலையம் பரமக்குடி வேளாண்மை அலுவலர் கீர்த்தகா மண் மாதிரி சேகரிக்கும் முறை, மண் ஆய்வு பற்றியும் பேசினர்.

வேளாண்மை அலுவலர் ஆறுமுகம் ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பு செயல்விளக்கம் அளித்தார். முன்னதாக சிறுவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையம் குயவன்குடி, உயிர் உர உற்பத்தி மையம் ராமநாதபுரம் ஆகியவற்றை கண்டுணர்வு சுற்றுலா மேற்கொண்டு பயிற்சி பெற்றனர். விவசாயிகளுக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்யும் கையேடு வழங்கப்பட்டது. இதில், வேளாண்மை அலுவலர்கள் கீர்த்தனா, பிரியா, சிறுவயல் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



Next Story