ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடந்த "எண்ணும் எழுத்தும்" பயிற்சி


ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடந்த எண்ணும் எழுத்தும் பயிற்சி
x

உடுமலையில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடந்து வந்த "எண்ணும் எழுத்தும்" பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது. ஆசிரியர்கள் குழுக்களாக மாதிரி வகுப்புகளை நடத்தினர்.

திருப்பூர்

உடுமலை

உடுமலையில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் நடந்து வந்த "எண்ணும் எழுத்தும்" பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது. ஆசிரியர்கள் குழுக்களாக மாதிரி வகுப்புகளை நடத்தினர்.

எண்ணும் எழுத்தும் திட்டம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1,2,3-ம் வகுப்புகளுக்கு 2022-2023-ம் ஆண்டிலிருந்து "எண்ணும் எழுத்தும்" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி கடந்த 6-ந் தேதி முதல் நேற்று வரை வட்டார அளவில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அறிவுறுத்தல்படி உடுமலை வட்டார அளவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதில் 163 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளும் ஒரே வகுப்பில், கற்கும்படியாக அவர்களின் நிலைகளுக்கு ஏற்றாற்போல், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் அமைக்கப்பட்ட ஆசிரியர் கையேடுகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மாணவர்கள் வகை

1-ம்வகுப்பு மாணவர்கள் அரும்பு நிலை எனவும், 2-ம்வகுப்பு மாணவர்கள் மொட்டுநிலை எனவும், 3-ம் வகுப்பு மாணவர்கள் மலர் நிலை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சி நூல்களில் மாணவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்பாடுகள் தரப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் அமைக்க வேண்டிய வகுப்பறை களங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பல்வேறு கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளை பயன்படுத்தி எவ்வாறு வகுப்பறைச் சூழலை மகிழ்வுடனும், ஆர்வத்துடனும் மாற்றி அமைப்பது என்பது குறித்து கருத்தாளர்கள் விளக்கிக் கூறினர். மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆசிரியர் பயிற்சி கையேடுகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பயிற்சியில் விளக்கப்பட்டது.

மாதிரி வகுப்புகள்

மேலும் ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் ஆசிரியர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு மாதிரி வகுப்புகளை நடத்தினர். பள்ளிகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளை ஆசிரியர்கள், குழுக்களாக இணைந்து தயாரித்தனர். இந்த பயிற்சி வகுப்புகளை திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், முதுநிலை விரிவுரையாளர்கள் விமலாதேவி, பாபி இந்திரா ஆகியோர் பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களிடம் எடுத்துரைத்தனர். பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மனோகரன், ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story