நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு-நோய் மேலாண்மை பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு-நோய் மேலாண்மை பயிற்சி நடந்தது.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை பயிற்சி நடந்தது. இதற்கு நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சபாபதி, விவசாயிகளுக்கு இளங்குஞ்சு பராமரிப்பு, கோழி பராமரிப்பு, சிக்கனமான தீவன முறைகள், மீன் ஊறுகாய் தீவனம், அசோலா உற்பத்தி பற்றி விளக்கம் அளித்தார். இதில் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரன், அரசு கால்நடை டாக்டர் மகேந்திரன், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ஜெகதீசன், பெரியார்ராமசாமி, கமலசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பயிற்சியையொட்டி கோழிகளுக்கான பாரம்பரிய வைத்திய முறைகள், அதற்கு பயன்படக்கூடிய இலை, தழைகள் தொடர்பான கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக நாட்டுக்கோழி பராமரிப்பு மற்றும் மூலிகை மருத்துவம் தொடர்பான கையேடு வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர், தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 37 விவசாயிகள் கலந்து கொண்டனர்.