இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
சிவகங்கை
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் கணேசன் முன்னிலை வகித்தார். கருத்தாளர்களாக ஆசிரியர்கள் கீதா, பியூலா ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் எஸ்.புதூர், கட்டுக்குடிபட்டி, கரிசல்பட்டி, உலகம்பட்டி ஆகிய குறுவள மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுனர்கள் கிறிஸ்டோபர், ஜெயலட்சுமி மற்றும் வட்டார இல்லம்தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story