பாப்பிரெட்டிப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி


பாப்பிரெட்டிப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தமிழக அரசின் 'அனைவருக்கும் வீடு மற்றும் குடிசை இல்லா தமிழகம்' என்ற இலக்கை அடையும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதன்படி வீடு இல்லாதவர்கள் மற்றும் குடிசைகள் மற்றும் வாழ தகுதியற்ற வீடுகளில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஆயத்த பயிற்சி பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊராட்சி கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மண்டல அலுவலர் மாரிமுத்து ராஜ் பங்கேற்று கணக்கெடுப்பு முறைகள், பயனாளிகளை கண்டறிதல் குறித்து விளக்கினார். இந்த பயிற்சி கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தராம விஜயரங்கன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமாரி கண்ணன், சஞ்சீவன், கண்ணன், மார்கரெட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story