சஜ்ஜலஅள்ளியில், விவசாயிகளுக்கு பயிற்சி
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி உள் வட்டார அளவிலான வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு நானோ யூரியா பயன்படுத்துவது குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் சஜ்ஜலஅள்ளி கிராமத்தில் நடைபெற்றது. பென்னாகரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் கலைபிரியா, கள அலுவலர் ஷேக் அப்துல்லா, உதவி கள அலுவலர் அருண்குமார் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
குருணை வடிவ யூரியாவை விவசாயிகள் பயன்படுத்தும்போது, அதனை பயிர்கள் 50 சதவீதம் மட்டுமே எடுத்து கொள்ளும். ஆனால் நானோ யூரியாவை பயன்படுத்தும்போது பயிர்கள் 80 சதவீத அளவுக்கு யூரியாவை எடுத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் மண்ணுக்கு அடியில் உள்ள மண்புழுவுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், நானோ யூரியா பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.