மீனவ பெண்களுக்கு பயிற்சி


மீனவ பெண்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மீனவ பெண்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

ராமநாதபுரம்

திருவாடானை,

திருவாடானை தாலுகா வட்டானம் ஊராட்சி, தாமோதரன் பட்டினம் கிராமத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் சமுதாய திறன் பள்ளி மூலம் 30 மீனவ பெண்களுக்கு மீன் அமினோ அமிலம் தயாரித்தல் பயிற்சி நடைபெற்றது. வாழ்ந்து காட்டுவோம் திட்ட வட்டார அணித்தலைவர் செல்வமணி பயிற்சியை தொடங்கி வைத்தார். பசுமை சாரல் தொழில் குழுவை சேர்ந்த 30 பெண்களுக்கு பயிற்றுனர் குமரவள்ளி பயிற்சி அளித்தார். மீன் அமினோ அமிலம் பூச்சி விரட்டியாகவும் இயற்கை உரமாகவும் பயன்படுகிறது என்றும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகும் என்றும் பயிற்றுனர் குமரவள்ளி தெரிவித்தார். 10 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


Next Story