போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உதவி பிரிவு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் தபால் துறை உதவியாளர் போன்ற பல்வேறு நிலைகளில் 7500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1.8.23 தேதியில் 18 முதல் 27 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 3.5.23 ஆகும். இதுகுறித்து கூடுதல் விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.100 ஆகும். பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 3.5.23 அன்று தொடங்கப்பட உள்ளது. இதில் சேர விரும்புபவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்த விவரங்களோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9486821148 என்ற எண்ணில் வாட்சப் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.