கிருஷ்ணகிரியில் சப்- இன்ஸ்பெக்டர், போலீஸ் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு-கலெக்டர் தகவல்


கிருஷ்ணகிரியில் சப்- இன்ஸ்பெக்டர், போலீஸ் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 621 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல், 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டாம் நிலைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்பட காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான போட்டித் தேர்விற்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 12-ந் தேதி முதல் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு...

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://bitly/44ChyaS மூலமாகவோ அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்தோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய, 04343 291983 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story