ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி ஒன்றியத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் 255 ஆசிரியர்களுக்கு சிவகாசியில் 2 மையங்களில் 3 நாட்கள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த சிறப்பு பயிற்சி வகுப்பை சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் எம்பெருமாள் தொடங்கி வைத்தார். பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ஞானகனி, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் ராசிங்கம், மெர்சி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாக சரவணக்குமாரி, செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி செய்திருந்தார்.
Related Tags :
Next Story