சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதும் போலீசாருக்கு பயிற்சி புத்தகங்கள்


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதும் போலீசாருக்கு பயிற்சி புத்தகங்கள்
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதும் போலீசாருக்கு பயிற்சி புத்தகங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

வருகிற 25-ந் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு எழுத உள்ள போலீசாருக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வினை எதிர்கொள்ள இருக்கும் சுமார் 80 போலீசாருக்கு தேர்விற்கான 200 பயிற்சி புத்தகங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வழங்கி தேர்வினை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்ற குறிப்புகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். தேர்வு தொடர்பாக, போலீசாரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து தேர்வினை நல்ல முறையில் எழுத கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


Related Tags :
Next Story