காலை உணவு திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி


காலை உணவு திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி
x

நீடாமங்கலத்தில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் பற்றிய களப் பணியாளர்களுக்கு பயிற்சி நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அளிக்கப்பட்டது. நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், தாசில்தார் பரஞ்ஜோதி, சத்துணவு மேலாளர் சோமசுந்தரம், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக ஊரக வாழ்வாதார திட்டம் சார்பில் அளிக்கப்பட்ட இப்பயிற்சியில் 50 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார மேலாண்மை மேலாளர் சுபஸ்ரீ செய்திருந்தார்.


Next Story