பயிற்சி முகாம்
சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில், கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகப்பிரியா, போத்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல் ஜீவன் மிஷன் சார்பில் களநீர் பரிசோதனை கருவியை பயன்படுத்தி குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் கோபால் வழிகாட்டுதலின்படி விருதுநகர் மாவட்ட நிர்வாக பொறியாளர் கென்னடி, உதவி நிர்வாக பொறியாளர் கற்பகவள்ளி ஆகியோர் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் இளநிலை நீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார் கலந்து கொண்டு சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு தண்ணீர் தரம், தண்ணீர் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு. மழைநீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை காளியம்மன் மகளிர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.