பேராவூரணியில் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பு
பேராவூரணியில் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பு 2-ம் கட்டமாக நடந்தது.
பேராவூரணியில் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பு 2-ம் கட்டமாக நடந்தது.
எண்ணும், எழுத்தும் திட்ட பயிற்சி
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பு 2-ம் கட்டமாக 3 நாட்கள் நடந்தது. பயிற்சி வகுப்பிற்கு, ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், தனியார் பள்ளி தாளாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் முனிராஜ், சிவமுருகன், சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்கள் ஹாஜாமைதீன், ரஞ்சித் குமார், மார்சலின், அருண், பியூலா, காளீஸ்வரி, கமலிஸ்ரீ உள்ளிட்ட 12 பேர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். தொடக்கநிலை மாணவர்களான 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் சார்ந்த 2-ம் பருவத்திற்கான வழிகாட்டு கற்பித்தல் செயல்முறை, செயல்பாட்டுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆய்வு
பேராவூரணி வட்டாரக் கல்வி அலுவலர் அங்கையற்கண்ணி, பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் 181 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செங்குட்டுவன் பயிற்சி வகுப்பை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.