விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்


விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை வட்டாரம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் புளியால் கிராமத்தில் விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் நெப்போலியன் தலைமை தாங்கி தரிசு நில மேம்பாடு பற்றியும், கைத்தெளிப்பான், தார்ப்பாய் மற்றும் விவசாய உபகரணங்கள் 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பெறலாம் எனவும் தெரிவித்தார். ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் சேவுகன்செட்டி தற்போது பெய்து வரும் மழை சூழலால் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல் அதிகரிக்கும், ஆகையால் முன்னெச்செரிக்கை தொழில்நுட்பங்களை தெரிவித்தார். தேவகோட்டை உதவி வேளாண்மை அலுவலர் சீனிவாசன், பிரதம மந்திரி விவசாயிகள் ஊக்கத்தொகை திட்ட பயனாளிகள் அனைவரும் இ.கே.ஒய்.சி. செய்திடும் முறை பற்றி தெரிவித்தார். தேவகோட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் சூடோமோனஸ் மூலம் குலைநோய் கட்டுபாடு பற்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கபாண்டி, தீபா செய்திருந்தனர்.


Next Story