தேசிய இளையோர் மன்றத்தினருக்கு சமூக வளர்ச்சிக்கான பயிற்சிமாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தொடங்கி வைத்தார்
தேசிய இளையோர் மன்றத்தினருக்கு சமூக வளர்ச்சிக்கான பயிற்சி முகாமை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தொடங்கி வைத்தார்.
கடலூர்
மத்திய அரசின் நேரு யுவகேந்திரா இளையோர் மன்றத்தின் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு தலைமைத்துவம், சமூக வளர்ச்சிக்கான 3 நாள் பயிற்சி முகாம் கடலூரில் நடந்தது. இதற்கு மாவட்ட இளையோர் அலுவலர் ரிஜேஷ் குமார் தலைமை தாங்கினார். கணக்காளர் புஷ்பலதா வரவேற்றார். பயிற்சியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்து, இளையோர் மன்ற நிர்வாகிகளுக்கு பயிற்சி கையேட்டை வழங்கினார். இதில் கவிஞர் சீனு.செந்தாமரை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சந்தானராஜ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பயிற்சியில் 13 ஒன்றியங்களை சேர்ந்த 40 இளையோர் அமைப்பினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் தேசிய இளையோர் சேவை தொண்டர் நிகிதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story