மாற்று திறன் குழந்தைகளின் பெற்றோருக்கான பயிற்சி முகாம்
மாற்று திறன் குழந்தைகளின் பெற்றோருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
தொண்டி
திருவாடானையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்று திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். அனைவரையும் ஆசிரியர் பயிற்றுநர் காளமேகலை வரவேற்றார். பயிற்சியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுகாதார செவிலியர் மணிமேகலை, அங்கன்வாடி பணியாளர் மாலா, சிறப்பு ஆசிரியர்கள், வட்டார வளமைய தசை பயிற்றுனர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆயத்த பயிற்சி மைய பணியாளர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பாசிரியர் அலெக்ஸ் பாண்டியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story