தென்னை மதிப்பு கூட்டுதல் பயிற்சி


தென்னை மதிப்பு கூட்டுதல் பயிற்சி
x
தினத்தந்தி 6 May 2023 12:45 AM IST (Updated: 6 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தென்னை மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வணிக முறையில் தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தேங்காய் எண்ணெய் சோப்பு, தேங்காய் ஓட்டை எரித்து கிடைக்கக்கூடிய பொடியை பயன் படுத்தி சோப்பு தயாரித்தல் உள்ளிட்டவை தொடர்பான தென்னை மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடந்தது. இதில் தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் கிடைக்கும் உபபொருட்களை வைத்து உலர் தேங்காய், தேங்காய் சீவல், தேங்காய் மிட்டாய் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் பற்றி செயல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், பயிற்சி பெற்றவர்களுக்கு கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியை இணை பேராசிரியை கமலசுந்தரி ஒருங்கிணைத்தார்.


Next Story