விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
கயத்தாறு அருகே கே.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே கே.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். பயிற்சியில் வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை கல்லூரியின் அறிவியல் மையத்தை சார்ந்த வேளாண் அலுவலர் சுமதி, வேளாண் விளைபொருட்களில் மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ரத்தினம் பால் ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story