வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்


வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
x

நாரியமங்கலம் கிராமத்தில் வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த நாரியமங்கலம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன் தலைமை தாங்கி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து கூறினார். முகாமில் உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயலட்சுமி கலந்துகொண்டு வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள உயிர் உரங்கள், விதைகள் மற்றும் நுண்ணூட்ட கலவை ஆகியவற்றின் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் வினோத்குமார் அட்மா திட்டங்கள் குறித்தும், வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும் அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மைய பேராசிரியர் நிர்மலாகுமாரி பயிற்சி அளித்தும், விவசாயிகளின் சந்தேங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

இதில், நாரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story