அரசு அலுவலர்கள் வருமானவரி தாக்கல் செய்வது குறித்து பயிற்சி முகாம்


அரசு அலுவலர்கள் வருமானவரி தாக்கல் செய்வது குறித்து பயிற்சி முகாம்
x

திருவண்ணாமலையில் அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து பயிற்சி முகாம் நடந்தது,

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து பயிற்சி முகாம் நடந்தது,

அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கருவூல அலுவலர் முத்துசிலுப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயாராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை), வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் மாதசம்பளத்தில் வருமான வரியை கணக்கிட்டு மாதசம்பளத்தில் பிடித்தம் செய்வது, அந்த தொகையை உரிய காலத்திற்குள் வருமான வரி கணக்கில் சேர்ப்பது, தனிப்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருமான வரி படிவத்தை உரிய காலக்கெடுக்குள் தாக்கல் செய்வது உள்ளிட்ட கடமைகள், பொறுப்புகள் குறித்தும், வருமானவரி படிவம் தாக்கல் செய்யாத போது எதிர்கொள்ள வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும், விரிவாகவும், துறை அலுவலர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

மேலும் வருமானவரி இணையதளத்தில் வருமான வரி படிவம் தாக்கல் செய்வது, பிடித்தங்களை சரிபார்ப்பது தொடர்பான நேரடியான செயல் விளக்கங்களை மாவட்ட கருவூல கண்காணிப்பாளர்கள் செய்து காட்டினர். இதில் 200-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் இந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றனர். பயிற்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story