தேசிய தொழுநோய் ஆய்வுப்பணிக்கான பயிற்சி முகாம்


தேசிய தொழுநோய் ஆய்வுப்பணிக்கான பயிற்சி முகாம்
x

தேசிய தொழுநோய் ஆய்வுப்பணிக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆலங்காயம் வட்டாரத்தில் தேசிய தொழுநோதொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டறியும் ஆய்வுப் பணி முகாம் வரும் 17-ந் தேதி முதல் ஆகஸ்ட் 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆலங்காயம் மற்றும் நிம்மியம்பட்டு பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.பசுபதி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் த.ரா.செந்தில் பேசுகையில், ''இந்த முகாமினை சிறப்பான முறையில் பயன்படுத்தி தொழுநோய் இல்லாத ஆலங்காயம் வட்டாரமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து பணி புரிய வேண்டும்'' என அறிவுறுத்தினார்.

மாவட்ட தொழுநோய் அலுவலக மருத்துவ அலுவலர் டாக்டர் வெற்றிச்செல்வி தொழுநோய் பற்றிய பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட நலக்கல்வியாளர் லட்சுமி நாராயணன் மற்றும் மேற்பார்வையாளர் மோகன மூர்த்தி பேசினர்.

இதில் ஆலங்காயம் வட்டாரத்தை சார்ந்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார மேற்பார்வையாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.


Next Story